தமிழ் சமுகம் எதிர்கொள்ளுமா.....




……….
போரின் கனதி….. யுத்தம் முடிவுற்று இரண்டு வருடத்தை நெருங்கும் நிலை கலாசாரசீழிவுகள் கரைபுரண்டு ஓடும் பரிதாபகதியில் எயிட்ஸ் நோய் விசமத்தனமாகவே பரவும் காலத்தின் கையிறுநிலை அதில் கடவுள் தான் வரவேண்டும்
ஆண்மை காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகள் சொல்கின்றன விதவைகள் எண்ணிக்கை 89 பற்றி சிந்திக்க வேண்டியது காலத்தின் தேவையாகவே உள்ளது. இங்கு தான் மேலும் சிந்திக்க வேண்டும் . இவர்களில் தங்கிவாழ்வோர் பலர். அதிலும் குறிப்பாக பாடசாலை செல்ல வேண்டிய கட்டாய வயதினர். இவர்கள் சிறுவர் தொழிலாழிகளாகும் நிர்க்கதி. போரில் ஆண்கள் கொல்லப்பட்டு விட்டதனால் குடும்ப பாரத்தையும் இவர்களே சுமக்கவேண்டிய தலைவிதி
அத்துடன் போரில் ஊனமுற்றோர் இவ்வாறான நிலையில் இவர்கள் பக்கம் உலகமும் உதவும் உள்ளங்களும் தம் பார்வையை திருப்பாதவிடத்து ஈராக் மற்றம் ஆப்கான் அகதிகள் பாலியல்பண்டத்தையே விற்கும் பரிதாபகதியில் உள்ளமை உலகம் நேரில் தரிசித்த நியதியேயாகும். இவ்வாறே எம்சமுகத்திலும் இலட்சக்கணக்கானோரின் எதிர்காலம் என்னவென்றே கேள்விக்குறியாக உள்ளது. அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் எவருமே இவர்கள் விடயத்தில் கண்ணெடுத்துப் பாத்ததாகத் தெரியவில்லை.
இவர்களைப் பொறுத்தவகையில் இடப்பெயர்வுகள் நலிவுந்ந உறைவிட வசதிகள் வருமானமமின்மை பிள்ளைகளின் சுமை வாழ்க்கைச் செலவு தொழில்வாய்ப்பின்மை இழப்புக்களினால் இத்துப்போய்விட்டது இவர்களின் இதயம். உளரீதியாக நொந்துபோன ஓர் சமுகம் இதே நிலையில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் பாலியல் சார்கொடூரங்கள் வன்முறைகள் சுரண்டல்கள் போன்றவற்றினால் மேலும் வலுவாகவே உளரீதியாகப் பாதிப்படைகின்றனர்.
வுpதவைகள் வன்முறைகளால் மற்றும் இயற்கை அனர்த்தற்கள் நோய்கள் தற்கொலைகள் இவற்றினால் கணவன்மாரை இழந்தவர்களாவே உள்ளனர். இவர் பெரும்பாலும் இளம்வயதினராகவே உள்ளனர். எனவே பாலியல் துனபுறுத்தல்களுக்கும் அதனோடு விபச்சாரத்தினுள் நுழைவதுமான ஓர் துன்பநிலையே தொடர்கின்றது.
அண்மையில் வெளியான சுப்பர்ஸ்ரார் ரஜினியின் எந்திரன் படத்தினை உன்னிப்பாக நோக்கினால் இயந்திரமனிதனுக்கு உணர்வைக் கொடுத்ததனால் அந்த விஞ்ஞானி படும் அவஸ்த்தை. அதுவும் பாலியல் உணர்வை கொடுத்துவிட்டமை. இங்கு இளம் விதவைகள் என்னும் விடயத்தில் மறுவாழ்வு என்பது எதுஎன்ற கனதிமிக்க வினாவிற்கு விடை காணவேண்டிய நிலையே உள்ளது உடற்றெழிலியல் ரீதியாக இவர்களை எல்லைப்படுத்த முடியாது இது இவ்வாறிருக்க கண்கொத்திப்பாம்புகள் போன்று பாலியல் முகவர்களும் படையெடுக்கும் சூழல் அதுதாண்டி போரின் பின் எயிட்ஸ் நோய்த்தாக்கம் பற்றி ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் சான்று பகரத்தவறவில்லை என்பதும் கோடிட்டுக்காட்ட வேண்டிய விடயமே ஆகும் . எனவே விபச்சாரம் அதனூடு எயிட்ஸ் உயிர்கொல்லி நோயின் பிடியில் மாழ்வதைக்காட்டினும் மறுவாழ்வுஎன்பது அர்த்தம் பெறுகின்றது மேலும் விபச்சரத்தின் விசமத்தனமான பரவல் எம்சமுகத்திற்கு பெரும் அழிவையே தரும் நிலையில் மக்கள் விழிப்புற வேண்டியது காலத்தின் தேவையேயாகும்

2 comments:

  1. மிக முக்கியமான பதிவு. தமிழ் சமூகத்தினர் கவனத்தில் எடுக்க வேண்டிய விடயம்.

    ReplyDelete
  2. எங்கள் சமுகத்தின் அழிவில் பலர் தம்மை பங்காளியாக்க வேண்டும் அனேகரின் அசமந்தப்போக்கு இதற்கு காரணமாகின்றது

    ReplyDelete