உலக தமிழ் உறவுகளே

உலக தமிழ் உறவுகளே


போரில் நலிவுற்ற எம் சமுகம் அதன் எதிரிடையாக இன்னும் பல இன்னல்களை சந்திக்கின்ற நியதியில் போரைவிட கொடிய ஒர் கால இடைவெளியில் நகர்கின்றது இவை பற்றி சிந்திக்க தவறின் அது மோசமான அழிவை எதிர்கொள்ளும் நிலையே உள்ளது
போரின் பின் விதவைகள் அதுவும் இளம் விதவைகள் இவர்களை வறுமை தங்கிவாழ்வோர் அதாவது மாற்றுவலுவை எதிர்பார்க்கும் குழந்தைகள் ஊனமுற்ற நிலை வருமானமின்மை போரில் கணவரை இழந்ததால் குடும்பப்பாரத்தை சுமக்க வேணடிய நிலை உணர்வு ரீதியான பலவீனம் இவற்றை பலமாக கொண்டு இவர்களை பாலியல் ரீதியில் பாதளத்தில் தள்ளி எயிட்ஸ் உயிர் கொல்லி நோயின் பிடியில் சிக்க கண்கொத்திப்பாம்புகளாக பாலியல் முகவர்கள் களமிறங்கிவிட்ட காலத்தின் கொடுமையான மாற்றம்
இது மருத்துவத்துறையும் தன்னை வியாபாரரீதியில் தயார்ப்படுத்தி செல்வதால் உளவியல்ரீதியாகவும் நோயியல் ரீதியாகவும் மக்கள் ஒர் துன்ப சாகரத்தில் தத்தளிக்கும் தன்மையையே காணமுடிகின்றது திருப்பதிபோன்ற சினிமா படங்களை நேரில் தரிசிக்கும் நியதி இன்னும் பல மைல் தூரம் சென்று கண் சத்திர சிகிச்சையை கண்டியில் மேற்கொள்ள வேண்டி துன்பங்கள் சூழ்ந்து விட்டது
வன்னி மற்று நகரை விலகிய பகுதிகளில் கர்ப்பவதிகளின் அனாவசிய மரணம் இவ்வாரே செல்லின் உலகத்தின் வேறு இடங்களை சொல்வதற்கு பதிலாக எமது தாய்த்திரு நாட்டில் பல இடங்களை குறிப்பிடும் வேதனையை நாம் உணரதவற மாட்டோம் என்பதே நியதி
திறந்தபாலியல் கலாசாரப்பின்னியில் கலாச்சார சீரழிவுகள் மிகையுற்ற நிலையில் இளவயதினர் விழிப்புணர்வு எதுமின்றி உயிர்கொல்லி நோயில் வீழ்த்தப்படும் கொடூரம்
புத்தியீவிகள் சிந்திக்க தவறிவிட்டதன் விளைவாக உயர்கல்விப்பிடங்களை கொலை முயற்சியும் வருடாவருடம் தற்கொலையும் தான் அலங்கரித்தால் மக்கள் உணரவேண்டிய விடயங்கள் பல உள்ளதே காலத்தின் தேவையாகும்
பொறுப்புக்களில் இருந்து நாம் விலகி ஒடலாம் -ஆனால்
விளைவுகள் நம்மை நோக்கியே தேடிவரும்